சேரன் காரில் சென்றுகொண்டிருக்கிறார்... மின்னல் வேகத்தில் காரை ஓவர்டேக் செய்து பைக் ஒன்று பறக்கிறது. கைக்குழந்தையோடு பின்னால் ஒரு பெண். இதைக் கண்டதும் சேரன் அவர்களுக்கு கோபம் வந்தது. அந்த புயல்வேக பைக்கை சேஸ் செய்து பிடித்து, பொண்டாட்டி புள்ளய பின்னால வைத்துக்கொண்டு இவ்வளவு வேகமாக போறியே, ஏதாவது ஒன்னுனா விளைவு என்னனு நினைச்சுப் பார்தியா? என சேரன் பொங்கியெழ, சாரி சார் இனிமே இப்படி வேகமாக போக மாட்டேன்! என பைக் ஓட்டியவர் மனமார மன்னிப்பு கேட்டார். எந்தப் படத்திற்காக இந்த காட்சி என்கிறீர்களா, இல்லை இது நிஜ சம்பவம் கோடம்பாக்கம் மேம்பாலத்தில் நடந்தது!
-