நகைச்சுவை நடிகர் குண்டு கல்யாணம் டைரக்டர் ஆகிறார்


நகைச்சுவை நடிகர் குண்டு கல்யாணம் முதன்முதலாக ஒரு படத்தை டைரக்டு செய்கிறார். இந்த படத்திற்கு நாங்க புதுசா என்று பெயர் சூட்டியிருக்கிறார். இது ஒரு முழு நீள நகைச்சுவை திரைப்படம். மூன்று இளைஞர்கள் இசை ஆர்வத்தால் சென்னை வருகிறார்கள். இசையின் மூலம் தங்கள் லட்சியத்தை அவர்கள் அடைந்தார்களா இல்லையா? என்பதே கதை.

'மதுரை - தேனி வழி ஆண்டிப்பட்டி' படத்தில் நடித்த அரவிந்த் ஆர்.கண்ணன் ஆகிய இருவரும் கதாநாயகர்களாக நடிக்க இவர்களுக்கு ஜோடியாக சுஹானி ஐஸ்வர்யா ஆகிய இருவரும் நடிக்கிறார்கள். மற்றும் ஆனந்தராஜ் கஞ்சாகருப்பு சிங்கமுத்து வெ.ஆ.மூர்த்தி ஆகியோருடன் குண்டு கல்யாணமும் நடிக்கிறார்.

0 Responses

Related Posts with Thumbnails