ஸ்ருதிஹாசன் முதல் தமிழ்படம் சூர்யாவுடன்
சமீபத்தில் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் மற்றும் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இருவரும் ஸ்ருதியை சந்தித்து கதையின் சுருக்கத்தை சொல்லி நடிக்க கேட்டார்கள், ஸ்ருதியும் உடனே ஒத்துக்கொண்டார். அவர் ஒத்துக்கொண்டமைக்கு காரணம் அந்த படத்தில் அவரது ஜோடி சூர்யா என்பது கூடுதல் தகவல். சூர்யா தனக்கு மிகவும் பிடித்த நடிகர் அவருடன் நடிக்கப்போவது மிகவும் சந்தோசமாகவும், படப்பிடிப்பு எப்போது தொடங்கும் எனவும் இருப்பதாக கூறினார்.
இந்தப் படத்தில் ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் தனது சொந்தக் குரலில் பாடல்கள் பாடுகிறார் ஸ்ருதி, இந்தப்படத்திற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விரைவில் எதிர்பார்க்கலாம்.
தமிழ் திரையுலக வரலாற்றில் - புதிய பல பரிணாமங்களை உறுவாக்கிய, கலைஞானி பத்மஸ்ரீ கமல்ஹாசன் அவர்களைப்போல், இவரும் வர வாழ்த்துகிறோம்.