நடிகர்களுக்கு தூதுவிடும் அசின்

TAMIL ACTRESS ASIN, ASIN HINDI FILMS,ASIN MOVIES LIST
மீண்டும் தமிழுக்கு வரும் அசின், தான் முன்பு ஜோடி சேர்ந்த அத்தனை ஹீரோக்களுக்கும் தூதுவிட்டு வருகிறார். இதில் விஜய்யைத் தொடர்ந்து விக்ரம், அஜீத், ஜெயம் ரவி ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள். இந்த சேதியறிந்த தமன்னா, அனுஸ்கா ஆகியோர் அதிர்ச்சியில் உள்ளனர்.

இளையராஜா பத்ம விருது பெற்றுக்கொண்டார்

நேற்று 7.04.2010 அன்று நமது இளையராஜா அவர்கள் ஜனாதிபதி அவர்களிடமிருந்து பத்ம விருதை பெற்றுக்கொண்டார். சங்கடங்கள் இருந்தபோதும் அரசு விருது எனும் காரணத்தால் புறக்கணிக்காமல் பெற்றுக்கொண்டதாக தெரிந்தது. விருதைப்பெறும்போது அவர் முகத்தில் மகிழ்ச்சி காணப்படவில்லை.

இசையில் ஞானியாய் இசைக்கடலில் வாழந்து கொண்டிருக்கும் இசையே. பல வெளிநாட்டு விருதுகள் உன் இடம் தேடி வரும்.


************

இந்த இசைக்கடலின் இசையில் வாழ்க்கையில் தொலைந்துபோன பலர் இன்னும் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். வாழ்க பல்லாண்டு நம் இசைக்கடல். வாழ்த்துங்கள் உங்கள் வாழ்த்துக்களை வாக்குகளாக



குளியல் காட்சியில் சிநேகா! (சினேகா)



குளியல் காட்சியில் சிநேகா!

பாலகிருஸ்ணா நடிக்கும் 'சிம்ஹா' என்றொரு தெலுங்கு படத்தில் , சிநேகா , நமீதா ஆகிய மூவரும் இணைந்துள்ளனர். இதில் நயன் , நமீதாவுக்கு இணையாக ஈடு கொடுக்க பாலகிருஸ்ணாவுடன் இணைந்து ஒரு குளியல் காட்சியில் நடித்துள்ளார் சினேகா


சென்னையிலும் 'சிகப்பு விளக்கு'

சென்னையிலும் 'சிகப்பு விளக்கு'

இந்தியாவிலேயே மும்பை, ஆகிய நகரங்களில்தான், அங்கீகரிக்கப்பட்ட 'சிகப்பு விளக்கு' பகுதிகள் உள்ளன. இந்நிலையில், சென்னையிலும் அங்கீகரிக்கப்பட்ட, சிகப்பு விளக்கு பகுதி வேண்டும் என்பதை வலியுறுத்தி, 'அந்தரங்கம்' என்றொரு படம் தயாராகியுள்ளது. இப்படத்தில், மும்பை மாடல் செல்வி செட்டி முக்கிய ரோலில் நடித்துள்ளார்.

பத்மபூசன் விருது இளையராஜா செல்லவில்லை


இந்த விருது இசைத்துறை சார்பாக இளையராஜாவுக்கு மட்டுமே வழங்கப்பட்டிருந்தால் சிறப்பாக இருந்திருக்கும். ரஹ்மானுக்கு வேறொரு சந்தர்ப்பத்தில் வழங்கியிருக்கலாம். இருவருக்கும் ஒரே நேரத்தில் இந்த விருதை கொடுத்திருப்பது சற்றே ஏமாற்றம்தான் என்றார்கள் அவர்கள்.

அவர்களின் மனவேதனையை வெளிப்படுத்துவது போலவே இந்த விருது நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை ராஜா. நிஜமான காரணம் எதுவோ?


http://tamilan-kavithaikal.blogspot.com/2010/04/blog-post.html

இசைஞானி இளையராஜாவிற்கு பத்மபூசன்


நம் இசைஞானி பெறும் முதல் மத்தியஅரசின் விருது இதுவாகும். இத்தனை ஆண்டுகள் இவரின் இசையில் மிதந்தவர்கள் இவரை மறந்தார்கள் கௌரவிக்க.

காலங்கடந்தேனும் இசைக்கடலை நினைத்தார்களே! உங்களது மகிழ்வை பகிர்ந்துகொள்ளுங்கள்.


நயனிற்கு நடனம் தந்த இரு பரிசு


நடனம் தனது காதல் பரிசாக நயமான நடிகைக்கு கிழக்கு கடற்கரை சாலை அருகே ஒரு ஆடம்பர பங்களாவை வாங்கி கொடுத்து இருக்கிறார். எப்போதும் கை விரலில் இருக்கிற மாதிரி ஒரு வைர மோதிரத்தையும் பரிசளித்து இருக்கிறார்.

நகைச்சுவை நடிகர் குண்டு கல்யாணம் டைரக்டர் ஆகிறார்


நகைச்சுவை நடிகர் குண்டு கல்யாணம் முதன்முதலாக ஒரு படத்தை டைரக்டு செய்கிறார். இந்த படத்திற்கு நாங்க புதுசா என்று பெயர் சூட்டியிருக்கிறார். இது ஒரு முழு நீள நகைச்சுவை திரைப்படம். மூன்று இளைஞர்கள் இசை ஆர்வத்தால் சென்னை வருகிறார்கள். இசையின் மூலம் தங்கள் லட்சியத்தை அவர்கள் அடைந்தார்களா இல்லையா? என்பதே கதை.

'மதுரை - தேனி வழி ஆண்டிப்பட்டி' படத்தில் நடித்த அரவிந்த் ஆர்.கண்ணன் ஆகிய இருவரும் கதாநாயகர்களாக நடிக்க இவர்களுக்கு ஜோடியாக சுஹானி ஐஸ்வர்யா ஆகிய இருவரும் நடிக்கிறார்கள். மற்றும் ஆனந்தராஜ் கஞ்சாகருப்பு சிங்கமுத்து வெ.ஆ.மூர்த்தி ஆகியோருடன் குண்டு கல்யாணமும் நடிக்கிறார்.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ஸ்ருதிஹாசன் முதல் தமிழ் திரைப்படம்


ஸ்ருதிஹாசன் முதல் தமிழ்படம் சூர்யாவுடன்

சமீபத்தில் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் மற்றும் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இருவரும் ஸ்ருதியை சந்தித்து கதையின் சுருக்கத்தை சொல்லி நடிக்க கேட்டார்கள், ஸ்ருதியும் உடனே ஒத்துக்கொண்டார். அவர் ஒத்துக்கொண்டமைக்கு காரணம் அந்த படத்தில் அவரது ஜோடி சூர்யா என்பது கூடுதல் தகவல். சூர்யா தனக்கு மிகவும் பிடித்த நடிகர் அவருடன் நடிக்கப்போவது மிகவும் சந்தோசமாகவும், படப்பிடிப்பு எப்போது தொடங்கும் எனவும் இருப்பதாக கூறினார்.

இந்தப் படத்தில் ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் தனது சொந்தக் குரலில் பாடல்கள் பாடுகிறார் ஸ்ருதி, இந்தப்படத்திற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விரைவில் எதிர்பார்க்கலாம்.

தமிழ் திரையுலக வரலாற்றில் - புதிய பல பரிணாமங்களை உறுவாக்கிய, கலைஞானி பத்மஸ்ரீ கமல்ஹாசன் அவர்களைப்போல், இவரும் வர வாழ்த்துகிறோம்.

மீண்டும் புரட்சிதமிழன் சத்யராஜ் - எவரெஸ்ட் பயணம்


மீண்டும் புரட்சிதமிழன் சத்யராஜ்

சில வருடங்களாக ஒரு சில படங்களில் மட்டுமே நடித்து வந்த 'மகாநடிகன்' திரு. சத்யராஜ் அவர்கள் மீண்டும் தனது இழந்த பார்ம்க்கு வந்துள்ளார். இந்த வருடம் 9 படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார். மிகப்பெரிய நடிகராக இருந்தும் தற்போதைய நடிகர்கள் அனைவருடனும் சரிசமமாக நடித்து வருகிறார் நம் அல்வா நாயகன். எந்தவொரு சங்கடத்தோடு தியேட்டர்களுக்கு சென்றாலும் சங்கடம் மறந்து சிரிக்கும் அளவிற்கு நக்கல் செய்வதில் வல்லவர் நம் புரட்சி தமிழன். தற்போது இவர் நடித்து வரும் படங்கள்

1. சினம் - [சத்யராஜ் - பூமிகா - நவ்தீப் - கிம் ஷர்மா மற்றும் சத்யன்]

2. களவாடிய பொழுதுகள் - [ பிரபுதேவா - பூமிகா - சத்யராஜ் (பெரியாராக) ]

3. குருசிஷ்யன் - [சத்யராஜ் - சுந்தர.சி - ஸ்ருதி பிரகாஸ்]

4. முறியடி - [சத்யராஜ் - கணேஷ் வெங்கட்ராமன் - ரம்யாநம்பீசன்]

5. ஆயிரம் விளக்கு - [சத்யராஜ் - சாந்தனு - சானாகான்]

6. குலசேகரனும் கூலிப்படையும் - [சத்யராஜ் - பிரகாஷ் ராஜ் - நட்ராஜ் - கீர்த்திசாவ்லா - உதயதாரா - சௌமியா - வடிவேலு - சீதா - தியாகு]

7. கௌரவர்கள் - சத்யராஜ் - விக்னேஷ் - யுவராணி - ரஞ்சித் - மோனிகா - விஜய் ராஜ் - சுகந்தி - பானுசந்தர் மற்றும் பலர்

8. பொன்னர்சங்கர் - [சத்யராஜ் - பிரஷாந்த் -ஜெயராம் -சிநேகா -பிரகாஷ் ராஜ் -நெப்போலியன் - ராஜ்கிரண் - விஜயகுமார் - வடிவேலு - ரியா கான் - குஷ்பூ - அம்பிகா - சீதா - மனோரமா - பொன்வண்ணன் - ஸ்ரீரஞ்சனி - கலைராணி]

9. இரண்டு முகம் - [சத்யராஜ் - கரண்]

***********

இவரைப்போல் மற்ற நடிகர்களும், கொள்கையை தளர்த்திக்கொண்டு இளம் தலைமுறையினருடன் சேர்ந்து நடித்தால், பல நல்ல கதாபாத்திரங்களை ரசிகர்கள் காண முடியும். மற்ற நடிகர்கள் யோசிப்பார்களா!


சேரனின் மனிதாபிமானம்




சேரன் காரில் சென்றுகொண்டிருக்கிறார்... மின்னல் வேகத்தில் காரை ஓவர்டேக் செய்து பைக் ஒன்று பறக்கிறது. கைக்குழந்தையோடு பின்னால் ஒரு பெண். இதைக் கண்டதும் சேரன் அவர்களுக்கு கோபம் வந்தது. அந்த புயல்வேக பைக்கை சேஸ் செய்து பிடித்து, பொண்டாட்டி புள்ளய பின்னால வைத்துக்கொண்டு இவ்வளவு வேகமாக போறியே, ஏதாவது ஒன்னுனா விளைவு என்னனு நினைச்சுப் பார்தியா? என சேரன் பொங்கியெழ, சாரி சார் இனிமே இப்படி வேகமாக போக மாட்டேன்! என பைக் ஓட்டியவர் மனமார மன்னிப்பு கேட்டார். எந்தப் படத்திற்காக இந்த காட்சி என்கிறீர்களா, இல்லை இது நிஜ சம்பவம் கோடம்பாக்கம் மேம்பாலத்தில் நடந்தது!

Related Posts with Thumbnails